• Breaking News

    மாவீரர் தினத்திற்கு எழுவருக்கு தடை உத்தரவு வழங்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்றம்...

    மாவீரர் தினத்துக்கு தடை விதிக்குமாறு கோரி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸார் இணைந்து பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    எழுவருக்கு மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி மூன்று பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், எந்தவிதமான கட்டளையையும் வழங்க முடியாது என அவர்களது கோரிக்கையை நிராகரித்து வழக்கினை தள்ளுபடி செய்தார்.

    அத்துடன் குறித்த எழுவரும் ஏதாவது குற்றமிழைத்தால் பொலிஸ் தண்டனை சட்டத்தின் கீழோ அல்லது வேறு சட்டங்களின் கீழோ அவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவித்தார்.

    அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதி இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

    குறித்த வழக்கில் தொடர்புடையவர்கள்  சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சட்டத்தரணி திருக்குமரன், சட்டத்தரணி குகதாசன் மற்றும் சட்டத்தரணி ராகினி நடராசா ஆகியோர் முன்னிலையாகினர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad