• Breaking News

    திருமணமான பெண்களே மறந்து கூட இவற்றைச் செய்து விடாதீர்கள்!

     


    ஒவ்வொரு வீட்டிலும் இன்னல்கள் நீங்க மகிழ்ச்சி, அமைதி நீடித்து இருக்க ஆன்மீக ரீதியாக சில தவறுகளை செய்யாமல் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


    அதுவும் பெண்கள் தெரியாமல் செய்யும் ஒருசில தவறுகளால் வீட்டில் கஷ்டங்கள் நீடிக்கலாம். அது என்னவென்று இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.


    * கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும்.


    * திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.


    * பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.


    * கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை, கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம்.


    * கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.


    * கோவில்களில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும். அல்லது இளநீரை தரவேண்டும். இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாவத்தையும், சாபத்தை போக்கும் வல்லமை உடையது.


    * எந்த ஒரு நல்ல காரியம் தொடங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழை பழம் தருவதும் தொடங்கும் காரியம் வெற்றியடைய செய்யும்.


    * வெள்ளி, செவ்வாயில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும். இது தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து ஆன்ம அமைதியை கொடுக்கும், அப்படி குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

    3 கருத்துகள்:

    1. இப்படி பாேலியான அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பரப்ப வேண்டாம்

      பதிலளிநீக்கு
    2. மூட நம்பிக்கை

      பதிலளிநீக்கு

    Post Top Ad

    Post Bottom Ad