20 கிலோ எடையை நடிகை அனுஷ்கா குறைத்தது எப்படி?
நடிகை அனுஷ்கா ஸீரோ சைஸ் படத்திற்காக உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது பழைய மாதிரியான ஸ்லிம்மான நிலைக்கு மாறியுள்ளார்.
இவரின் உடல் எடையைக் குறைப்பதற்கு இவர் எந்தமாதிரியான டயட் எடுத்துக்கொண்டார் என்பது அனைத்து ரசிகர்களின் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆம் குண்டான பெண்களுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் ஸீரோ சைஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், இதற்காகவே 20 கிலோ உடல் எடையைக் கூட்டினார்.
அதன் பின்பு கடுமையான போராட்டத்திற்கு பின்பு தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார். இவர் எடு்த்துக்கொண்ட டயட் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
▪️நடிகை அனுஷ்கா தண்ணீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
▪️பொதுவாக சருமத்தின் அழகிற்கு தண்ணீர் சத்து அவசியம் என்ற நிலையில், இவர் படப்பிடிப்பின் இடையே இளநீர், தண்ணீர் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
▪️தண்ணீர் மட்டுமின்றி பச்சைக்காய்கறிகளை உணவில் பாதியாக எடுத்துக்கொள்வாராம்.
▪️இவரது உணவில் தினமும் ஏதாவது ஒரு பச்சைக்காய்கறிகள் கண்டிப்பாக இருக்குமாம்.
▪️நம்மில் பலர் பசி எடுக்கும் போது சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். பிரபலங்களும் இதனை கடைபிடிக்கின்றனர். ஆனால் தமது பசிக்கு ஏற்ப 5 அல்லது ஏழு முறை என வசதிக்கேற்ப பிரித்துக்கொள்கின்றனர். ஆனால் உணவின் அளவில் மட்டும் மாற்றம் இருக்கக்கூடாதாம்.
▪️அதே போன்று இரவு 8 மணிக்கு முன்பே சாப்பிடுவது வழக்கம். காரணம் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதுடன், செரிமானத்தை மிக வேகமாக தூண்டும் என்பதும் காரணம்.
▪️குறிப்பாக வீட்டில் சமைக்கும் உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, ஜங்க் புட் என ஆரோக்கியத்திற்கு கேடு விளைப்பதை முற்றிலும் தவிர்ப்பதுடன், சர்க்கரை உணவுகள், கார்போஹைட்ரேட், மாவு பொருட்களால் ஆன உணவுகளை தவிர்க்கின்றார்.
▪️உணவுகளில் இவ்வளவு கவனம் செலுத்தினாலும், தினமும் உடற்பயிச்சி மற்றும் யோகா செய்வதை தவறுவதே இல்லையாம்.
கருத்துகள் இல்லை