• Breaking News

    சொந்தக் கட்சியையே அழித்தவராம் டியூ குணசேகர...

     ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அவரின் அமைச்சரவையையும் கடுமையாக விமர்சித்துள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர மீது, சரமாரியாக சொற்கணை தொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி.

    'ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்பதே எனது கருத்து. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான முட்டாள்தனமான அமைச்சரவையே இது.

    மடத்தனமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன' என்று டியூ குணசேகர அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

    இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'மொட்டு' கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கருத்து வெளியிட்டுள்ளார்.

    "டியூ குணசேகர என்பவர் பலவீனமான அரசியல் கட்சித் தலைவர். கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தவர். கோப் குழுவின் தலைவராக இருந்து எதனையும் செய்யவில்லை. அவர் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்" - என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad