• Breaking News

    யாழ். - கொழும்பு ரயில் சேவை நாளை மறுதினம் ஆரம்பம் !


    யாழ்ப்பாணம் (Jaffna) - கொழும்பு (Colombo) ரயில் சேவை நாளை மறுதினம் புதன்கிழமை (Wednesday) ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் பிரதான அதிபர் ரி. பிரதீபன் (Pradeepan) தெரிவித்துள்ளார்

    நாட்டில் கொரோனா (Corona - COVID 19) தீவிர பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த அடிப்படையில் யாழ்ப்பா ணம் - கொழும்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில், நாளை மறுதினம் புதன்கிழமை கல்கிசை (Mount Lavania) - காங்கேசன்துறை (KKS) இடையிலான ரயில் சேவை ஆரம்பமாகின்றது. நாளை மறுதினம் கல்கிசையிலிருந்து புறப்படும் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்தடைந்து மறுநாளான வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும். 

    எனினும், முற்பதிவு தொடர்பான தகவல்கள் எதுவும் அறவிக்கப்படவில்லை. நாளை மறுதினம் ரயில் சேவை வழக்கம்போல் இடம்பெறும். 

    யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழ்ப்பா ணத்திற்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad