மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் அணிவகுத்து செல்லும் பல்லாயிரக்கணக்கான நண்டுகள்...!
மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் தீவின் காடுகளிலிருந்து கடலுக்கு அணிவகுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.
வருடத்துக்கு ஒரு முறை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களிலேயே இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்வினை மேற்கொள்கின்றது.
கிறிஸ்மஸ் தீவு, செந்நிற நண்டுகளின் உறைவிடம் என அழைக்கப்படும் நிலையில், இங்கு ஒவ்வொரு சதுர மீற்றருக்குள்ளும் பாறைகளின் பிளவுகளிலும் பல்லாயிரம் கணக்கான செந்நிற நண்டுகள் காணப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் தீவு செந்நிற நண்டுகள் கடலில் தங்கள் முட்டைகளை இடுவதற்காக வருடா வருடம் தனது இடப்பெயர்வை மேற்கொள்ளும்.
மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் தீவிலுள்ள வீதிகளை மூடி நண்டுகளைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை