வட்டுக்கோட்டை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - கசிப்புடன் பெண்ணொருவர் கைது...!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கசிப்பு விற்பனை செய்துவந்த பெண்ணொருவர் இன்றைய தினம் (16) ஆயிரத்து ஐந்நூறு மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை