வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தீபாவளி தீபங்களின் வரிசை என்பது பொருள்.
உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்த்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப்ண்டிகை கொண்டாடப்படுகிறது .
இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து ஒளிமயமான வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று தீபங்களால் விளக்கேற்றுகிறோம்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனாப் பரவல் காரணமாக மக்கள் பல்வேறு அசொகரியங்களுக்கு உள்ளாகி மீண்டுவருகின்றனர்.
இந்த நாட்டிலே வாழுகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் ஐக்கியத்துடனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மக்கள கரமான தீபத் திருநாளில் தீபங்களின் பிரகாசத்தால் எல்லோருடைய வாழ்க்கையையும் ஒளி பெறட்டும்.
கருத்துகள் இல்லை