மீண்டும் எகிறுகிறது கொரோனா...!
கொரோனா தொற்றுக்குள்ளான, மேலும் 720 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552,994 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 14, 220 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 429 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 524,740 ஆக அதிகரித்துள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, அண்மைய நாட்களில் குறைந்து வந்த கொவிட் தொற்றுவீதம் மீண்டும் அதிகரிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை