வெள்ளக் காடாகியது யாழ்ப்பாணம்! சடுதியாக வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள்
நேற்று நள்ளிரவு தொடக்கம் பெய்துவரும் கனமழை காரணமாக வடக்கில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்டம் நகர் பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் பிரதான போக்குவரத்து வீதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளன.
மேலும் 24 மணிநேரம் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை