அராலி வடக்கு முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி வழிபாடு...
முருகனுக்குரிய முதன்மையான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
இந்த விரதம் தொடர்ந்து ஆறு நாட்கள் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
விரதத்தின் ஆறு நாட்களும் பக்தர்கள் உணவு உட்கொள்ளாமல் மிளகு, தண்ணி மட்டுமே உட்கொண்டு விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர்.
அந்தவகையில் இன்று கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாள் சூரசங்கார வழிபாடு அராலி வடக்கு முருகன் ஆலயத்தில் நடைபெற்றது.
அங்கு ஏராளமான பக்தர்கள் ஒன்றுகூடி எம்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.
கருத்துகள் இல்லை