• Breaking News

    பொருள்களின் விலை மீண்டும் அதிகரிக்கும், எஸ்.பி. திஸாநாயக்க


    நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து தட்டுப்பாடும் ஏற்படக்கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட் டிக்காட்டியுள்ளார். 

    கொத்மலை - பூண்டுலோயா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். 

    அவர் மேலும் தெரிவிக் கையில்- 

    சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு,  ஆடை ஏற்றுமதி ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான வழிகள் இழக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படக்கூடும்.

    உலகளவில் இன்று பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இங்கும் அந் நிலைமை ஏற்படலாம். கப்பல் கட்டணம் நூற்றுக்கு 300 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    போர்க் காலத்தில் பொரு ளாதாரம் சரிந்தது. போர் முடிந்த பின்னர் 2015 ஆகும்வரை சிறந்த வளர்ச்சி மட்டத்தில் நாம் இருந்தோம். 

    யுகதனவி விவகாரத்தில் அரசியல், பொருளாதாரம் என இரு பக்கங்கள் உள்ளன. அவை தொடர்பில் புரிந்துணர்வு இல்லாமல் சிலர் கதைக்கின்றனர். யுகதனவி தொடர்பில் அரசு எடுத்துள்ள முடிவு சரியானது-என்றார்.     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad