சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி
மயக்கம், வாய் குழறுதல் உள்ளிட்ட பாதிப்புகளோடு அவசரமாக காவேரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் ரஜினிகாந்த். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில இருந்து வீடு திரும்பினார். மூளைக்குச் செல்லும் இரத்த நாளமான கரோடிட் தமனியில் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்யப்பட்டு, அதன்பின் கண்காணிப்பில் இருந்த ரஜினி நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். போயஸ்கார்டன் வீட்டு வாசலில் ரஜினிக்கு ஆரத்தி எடுத்து அவரது குடும்பத்தினர் திருஷ்டி கழித்து அவரை அழைத்துச் சென்றனர்.
முன்னதாக நேற்று முன்னர் காலை காவேரி மருத்துவ மனையில் ரஜினியை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை