கல்லுண்டாய் குடியேற்றப்பகுதி மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
கல்லுண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்களுடைய வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
வருடா வருடம் அவர்கள் இவ்வாறு அனர்த்தங்களை எதிர்நோக்குகின்றனர். அந்தவகையில் அங்கு வசிக்கும் 75 குடும்பங்களுக்கு இன்றையதினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த உதவித்திட்டத்தினை "ரிதம்" தனியார் நிறுவனமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினூடாக வழங்கி மக்களுக்கு வைத்தது.
கருத்துகள் இல்லை