ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுமாறு வங்கி குடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு வங்கிக்கு கம்பி நீட்டியவருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு
ஹட்டனில் உள்ள தனியார் வங்கியின் ஏ. டி. எம். இல் வைப்பிலிடச் சென்ற பணத்துடன் தப்பிச் சென்ற சந்தேக நபரான வானின் சாரதியை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பணத்தை உரிய நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் தியத்தலாவை பிரதேசத்தை சேர்ந்த ருவன் குமார (வயது 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் உட்பட மேலும் இரு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் துப்பாக்கியுடன் இம்மாதம் முதலாம் திகதி கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் கினிகத்தேன தனியார் வங்கிகிளைகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹட்டனில் உள்ள தனியார் வங்கி கிளை ஏ.டி.எம்மில் பணத்தை வைப்பிலிடுவதற்காக உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் வானில் இருந்து இறங்கியவேளை வானின் சாரதி பணத்துடன் தப்பிச் சென்ற நிலையில் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர்சந்தேக நபரும் அவரது வானும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை