நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் வைரல் புகைப்படம்
நடிகர் அஜித் மகள் அனோஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தல அஜித் தான் செய்யும் ஒவ்வொரு செயலாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவரை திரையிலும், பொதுவெளியிலும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நடிப்பை தவிர மறுபுறம் துப்பாக்கி சுடுதல், பைக் ட்ரிப் என பிஸியாக இருக்கிறார் அஜித். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸை குவிக்கும்.
அம்மா ஷாலினி, சித்தி ஷாம்லியுடன் அனோஷ்கா |
தற்போது தல அஜித்தின் மகள் அனோஷ்கா அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவர் வளர்ந்து, தனது தாய் மற்றும் சித்தி ஷாம்லி அளவுக்கு உயரமாக இருப்பதால், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் அஜித்தை போன்று கண்ணாடி அணிந்துள்ளார்.
கருத்துகள் இல்லை