• Breaking News

    புரூஸ் லீ - அறியப்படாத பக்கங்கள்

    புரூஸ் லீக்கு அறிமுகம் தேவையில்லை. ஹாங்காங் திரைப்படத் துறையையே புதிய பரிமாணத்துக்கு மாற்றியதில் புரூஸ் லீயின் பங்கு குறிப்பிடத்தக்கது. குங் ஃபூவை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பிரபலப்படுதியதே புரூஸ் லீதான். 


    வரும் நவம்பர் 27, புரூஸ் லீயின் எண்பத்தோராவது பிறந்தநாள். அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளைப் பார்ப்போம்.

    புரூஸ் லீ – ஜெர்மனிய வம்சாவளியில் வந்தவர்

    புரூஸ் லீயின் தாத்தா ஒரு தூய்மையான ஜெர்மன் கத்தோலிக்கராக இருந்தார். 1950 களில், தூய சீன வம்சாவளியில் வந்தவர்களுக்கே முக்கிய குங் ஃபூ  பள்ளிகளில் அனுமதி கொடுக்கப்பட்டது. புரூஸ் லீயின் ஜெர்மனிய கலப்பினால்  இந்தப் பள்ளிகளில் புரூஸ் லீக்கு  அனுமதி மறுக்கப்பட்டது.



    காண்டாக்ட் லென்ஸ்களை முயற்சித்த முதல் நபர்களில் இவரும் ஒருவர்

    புரூஸ் லீ  கிட்டப்பார்வைக்குறைவால் அவதிப்பட்டார். காண்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்திய முதல் நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவை சங்கடமானதாக இருந்ததால், அவர் பயன்பாட்டை நிறுத்திவிட்டார்.


     
    புரூஸ் லீ  ஒரு சா-சா (Cha-Cha)  நடன சாம்பியன்

    புரூஸ், சா-சாவை விரும்பினார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும், ஆனால் அவர் ஹாங்காங்கில் ஒரு நடனப் போட்டியில் வென்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


    4.     அழகுக்காக அகற்றப்பட்ட வியர்வை சுரப்பிகள்

    புரூஸ் லீயின் அக்குளில் இருந்து வியர்வை சுரப்பிகள் முற்றிலும் அழகியல் காரணங்களுக்காக அகற்றப்பட்டன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 


    5.  ஒளிந்திருந்த ஓவியத்திறமை

    புரூஸ் லீ ஒரு அற்புதமான ஓவியன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? 

    அவர் வரைந்த ஒரு ஓவியம் இதோ:

     

    6.      புத்தகப்பிரியன்

     அறிவு மற்றும் கற்றல் மீது புரூஸ் லீக்கு தீராத வேட்கை இருந்தது. 2000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட சொந்த நூலகத்தை வைத்திருந்தார்.

     

    7.      பல்பணி (multitasking) செய்வதில் வல்லவராக இருந்தார்

    ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தார் புரூஸ் லீ. அவர் ஒரே நேரத்தில், புத்தகத்தைப் படித்துக்கொண்டும், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டும் தம்பிள்ஸ் உடற்பயிற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.


      
    நீச்சல் தெரியாத புரூஸ் லீ

    புரூஸ் லீக்கு அலைகடலென்றால் பிடிக்காது. அதிக தண்ணீருள்ள ஆறு, நீச்சல் குளங்களையும் விரும்பமாட்டார். அதனால் அவர் நீச்சல் கற்கவில்லை.


     
    புரூஸ் லீயிடம் கற்க ஒரு மணி நேர கட்டணம்

    புரூஸ் லீயிடம் பயிற்சி பெறுவது பெரும் பணக்காரர்களுக்கே சாத்தியமானது. 1960 களில், தற்காப்புக் கலைப் பாடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 275 அமெரிக்க  டாலர்கள் வசூலித்து வந்தார். இது இன்றைய தரத்தின்படி 2000 டாலர்களுக்குச் சமம்! கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாய்


      
    ஜாக்கி சானும் புரூஸ் லீயும்

    ஜாக்கி சான் ’என்டர் தி டிராகனில்’ புரூஸ் லீயுடன் இணைந்து நடித்தார். ஒரு சண்டைக்காட்சியில், லீயின் உதை தவறுதலாக சானின் தலையில் பட்டது. இதன் மூலம், இருவரும் நெருக்கமாகி, படப்பிடிப்பில் பலமணி நேரங்களை ஒன்றாக செலவிட்டனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad