• Breaking News

    யாழில் இன்று திரவ உரம் வழங்கப்படவுள்ளது...

    யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெற்செய்கை அவர்களுக்கு இன்றையதினம் திங்கட்கிழமை திரவ நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

    இந்த திரவ உரமானது யாழ். மாவட்டத்தில் புங்குடுதீவு மற்றும் நல்லூர் பகுதிகளை விடுத்து ஏனைய 13 பிரிவுகளுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த உரமானது ஒரு ஹெக்டேயருக்கு 1.25 லீற்றர் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன் தொடர்ச்சியாக இரண்டாம்கட்ட பசளை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad