• Breaking News

    யாழில் ரவிராஜ்ஜின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு...

     சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

    இந்த நிகழ்வு இன்று காலை சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

    சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

    இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

    இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad