கொக்குவில் பாடசாலையில் திறன் வகுப்பறை திறப்புவிழா...
யாழ்/கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலையில் புதிதாக அமைக்கப்பெற்ற திறன் வகுப்பறை திறப்புவிழா நேற்று (17) நடைபெற்றது.
இந்த திறன்வகுப்பறைக்கான நிதியினை இரட்ணம் அறக்கட்டளை (லண்டன்) மற்றும் ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி. செல்வநாயகி மகாலிங்கம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
பாடசாலையின் அதிபர் திரு.த.மனோகரன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபர் திரு.மாசிலாமணி அருளேந்திரன், ஓய்வுநிலை வலையக்கல்வி பணிப்பாளர் திரு.கிருஷ்ணகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை