ட்விட்டரில் ரஜினி செய்த வேலை!
இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
இதைகொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விடும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அதுமட்டுமல்லாது, சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு தேசியக் கொடியை முகப்புப் பக்கத்தில் வைத்து பறக்கவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை