கோட்டாபய தாய்லாந்தில் தஞ்சம்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்தது. இதனை அடுத்து 2 நாட்களில் மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
தற்போது, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கருத்துகள் இல்லை