சமைப்பதற்கு எதுவும் இல்லை என்று கண்ணீருடன் கூறிய மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்! – நாடு எங்கே செல்கிறது?
வீட்டில் சமைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த மனைவியை தாக்கிய கணவனை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் கணேமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபரின் மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல குடும்பங்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றமை வழமையாகிவிட்டது.
கருத்துகள் இல்லை