ஜேர்மனில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு
ஜேர்மனில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்னா் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட 37,120 தினசரி பாதிப்பு எண்ணிக்கைதான் அதிகபட்சமாக இருந்து வந்தது. கடந்த 7 நாள்களில் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 232.1 போ் என்ற விகிதத்தில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள் இல்லை