• Breaking News

    மூன்றாவது முறையாக சீன அதிபராகும் ஜி ஜின்பிங்...?

    மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்தியக் குழு ஆறாவது அமர்வை நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 400 உறுப்பினர்கள் பங்கேற்பதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அதிபருமான ஜி ஜின்பிங், தங்கள் கட்சியின் 100 ஆண்டுகால முக்கிய சாதனைகள் மற்றும் வரலாற்று அனுபவம் குறித்த வரைவுத் தீர்மானத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார். 

    9 ஆண்டுகளாக ஜி ஜின்பிங் சீன அதிபராக உள்ளார். அடுத்த ஆண்டுடன் அவரின் 2-வது அதிபர் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. கட்சி தற்போது ஜி ஜின்பிங் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரே மூன்றாவது தடவையாகவும் அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. 

    அவருக்கு முன்பு இருந்த அதிபர் ஹு ஜின்டோ இரண்டு முறை மட்டுமே அதிபராக இருந்தார். ஆனால் தற்போது இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்கலாம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 2018-ல் கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜி ஜிங்பிங் மாற்றி விட்டார். இதனால் அரசியல் ரீதியான இந்த  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad