பெண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.. என்ன காரணம்?
ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள உமோஜா கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
Photo Credit : Georgina Goodwin for the Observer |
இந்த கிராமத்தில் வாழும் 52 வயதான ஜேன் நோல்மோங்கனின் கதை -1990 களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் ஜேன். இதனால் ஜேனின் கணவனால், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜேன் . வீட்டிலிருந்து துரத்தப்ப்ட்ட ஜேன், தான் பாதுகாப்பாக வசிக்க தேர்ந்தெடுத்தது முழுவதும் பெண்களால் ஆளப்படும் ’உமோஜா’ கிராமத்தை. கடந்த 30 ஆண்டுகளாக, ஜேன், சம்பூர் கவுண்டியில் உள்ள உமோஜா கிராமத்தில், தனது எட்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
Photo Credit : Georgina Goodwin for the Observer |
"இந்த கிராமம் எனக்கு ஆதரவாக இருந்தது. நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஒன்றாக உழைத்தோம். பெண்களாகிய நாங்கள், எங்கள் கணவர்களுக்கு குப்பை போன்றவர்கள், அந்த வாழ்க்கையை விடுத்து, நாங்கள் இங்கே சுயகெளரவத்துடன், மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.” என்று ஜேன் தெரிவித்திருக்கிறார். வீட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு வாழத் தொடங்கினர்.
Photo Credit : Georgina Goodwin for the Observer |
மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்ட மான்யட்டா குடிசைகளால் இந்த கிராமம் நிறைந்துள்ளது. பாதுகாப்புக்காக இந்த குடிசைகளை சுற்றி முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. இங்கு வாழும் பெண்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தேன் மற்றும் கையால் செய்யப்பட்ட மணிகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் அவர்களின் வருமானத்திற்கு வேட்டு வைத்துள்ளது.
Source : Dominic Kirui/Thomson Reuters Foundation |
இன்றுவரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். ஏனெனில் ஆண்களின் கொடுங்கோன்மையை அவர்கள் சந்திப்பதில்லை.
கருத்துகள் இல்லை