கல்வியங்காட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...
வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கல்வியங்காடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகை அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) லண்டன் கிளையினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த உதவிப் பொருட்கள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இணைப்புச் செயலாளருமாகிய பா.கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை கையளித்தனர்.
கருத்துகள் இல்லை