• Breaking News

    பாராளுமன்றத்தில் கண்டமேனிக்கு பேசி கூச்சலிட்ட எம்.பிக்கள்...!

     சிறிலங்கா நாடாளுமன்றில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் பெரும் அமளி துமளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லக்ஷ்மன் கிரியெல்ல - மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமை - குருணாகல் இடையிலான பகுதியை விரைவாக திறக்குமாறு கோருகிறேன் எனவும், அதனை திறக்க முடியும் என பொறியியலாளர்கள் என்னிடம் கூறியுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார். 

    இதன் போதே பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் இடையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை சம்பந்தமான வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டது.

    இதன் போது இரண்டு பேருக்கும் இடையில் சபைக்கு பொருந்தாத சில வார்த்தைகள் பேசப்பட்டன. இரண்டு பேருக்கும் இடையிலான வாக்குவாதத்தை நிறுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

    இதன் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கடந்த நல்லாட்சி அரசாங்கம், இந்த வீதியை நிர்மாணிக்க ஒரு கிலோ மீற்றருக்கு 17 ஆயிரம் லட்சம் ரூபாயை மேலதிகமாக வழங்கியது தொடக்கம், முடிவின்றி வீதி நிர்மாணிக்கப்பட்டது.

    இவற்றை செய்தவர்கள் தற்போது சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த போது சபையில் உறுப்பினர்கள் பெரும் கோஷம் எழுப்பியிருந்தனர்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில், லக்ஷ்மன் கிரியெல்ல கருத்துத் தெரிவிக்கையில்,

    நான் கள்ளச் சாரயம், கசிப்பு காய்ச்சியவன் அல்ல. நாடாளுமன்ற அவையில் நாற்காலி, பைபிளை தூக்கி அடித்தவன் அல்ல. என்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டாம்.

    நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதால், என் மீது சேறுபூசுகின்றனர். வீதி எப்போது திறக்கப்படும் என்றே நான் கேட்டேன்  எனத் தெரிவிக்கும் போதே ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

    இதேவேளை, இவர், வெறுமனே புத்தகம் ஒன்றை பைபிள் என்கிறார், நீங்கள் வெறுமனே பரிதாபத்திற்கு உள்ளாக வேண்டாம், இருமுகம் கொண்ட அரசியல்வாதியே இவர் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad