மாவீரர் தின அனுஷ்டிப்பதற்கு எட்டு பேருக்கு தடை விதித்துள்ளது வவுனியா நீதிமன்றம்...
வவுனியா நீதிமன்றம் எட்டு பேருக்குத் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை மாவீரர்கள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதிமன்றம் குறித்த 8 பேருக்குத் தடை உத்தரவினை வழங்கியுள்ளது.
அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினை சேர்ந்த செயலாளர் கோ. ராஜ்குமார், தலைவி கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கயேந்திரகுமார் அல்லது கயன், சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நபர்கள் வவுனியா பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்துவதற்குக் கட்டளையிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12 மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை