மது போதையில் இளைஞர்கள் குழு அட்டகாசம் - வவுனியாவில் சம்பவம்...!
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் இளைஞர்கள் குழுவொன்று மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படப்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேராமாக இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்குழு அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டதுடன், வீதியின் குறுக்கே தமது மோட்டர் சைக்கிள்களை நிறுத்தி வைத்தும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் சத்தமிட்டதனால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி, மன்னார் வீதி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை