• Breaking News

    கொரோனாவை விரட்டும் புதிய மாத்திரை ஃபைசர் நிறுவனத்தினால் கண்டுபிடிப்பு...!

     கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதேவேளையில், பைசர் நிறுவனம் தங்களின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது.

    அதேபோல், சர்வதேச மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்புகளும் மாத்திரையை அங்கீரிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோர உள்ளதாக தெரிகிறது.

    அமெரிக்கா சில வாரங்களுக்கு உள்ளாகவோ அல்லது மாதங்களுக்கு உள்ளாகவோ பைசர் நிறுவனத்தின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையை அங்கீகரிப்பது தொடர்பான தனது முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.

    ஆன்டிவைரல் மாத்திரை ஒன்றுடன் பைசர் நிறுவன கொரோனா எதிர்ப்பு மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகளில் 89 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு அபாயம் குறைந்து இருப்பதாக பைசர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.

    இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் 775 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆவர்.

    அதோடு இலேசானது முதல் மிதமான அறிகுறிகளுடன் கொரோனா பாதித்தவர்கள். உடல் பருமன் மற்றும் நீரிழிவு அல்லது இதய நோய் பாதிப்பு இருந்தவர்கள் என்பதால் அதிக அபாயம் நிறைந்த நோயாளிகளாக கருதப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad