• Breaking News

    மீண்டும் அதிகரிக்கலாம் சமையல் எரிவாயு விலைகள்


    லாப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் விலையை அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தளவு தொகையினால் லாப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்துஎந்தத் தகவல்களும் இதுவரைவெளியிடப்படவில்லை.

    தற்போது, அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனத்துக்கு எரிவாயு விலையை அதிகரிக்கக்கூடிய இயலுமை காணப்படுகிறது.

    இதற்கு முன்னதாக 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை லாப்ஸ் நிறுவனம் 984 ரூபாயால் அதிகரித்தது. அதற்கமைய, அதன் புதிய விலை 2,840 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அவ்வாறே 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை 393 ரூபாயால் அதிகரித்ததையடுத்து, அதன் விலை 1,136  ரூபாயாக உயர்வடைந்தது. 

    மேலும், லிட்ரோ நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 1,182 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.

    தற்போது சந்தையில் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 2,675 ரூபாயாகக் காணப்படுகிறது. அத்துடன், ஐந்து கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலையும் 473 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. அதன்படி புதிய விலை 1,071 ரூபாயாக அதிகரித்தது.

    அவ்வாறே, 2.5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டரின் விலையும் 217 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 506 ரூபாயாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad