மனித மனத்தை அறியும் எதிர்கால தொழில்நுட்பம்
தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி முன்னெப்போதுமில்லாதவாறு மிக விரைவாக மாற்றமடைந்து வருகிறது. சில எதிர்கால வல்லுநர்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகற்பனாவாதமாகப் பார்க்கிறார்கள், சிலர் இது பேரழிவுக்கு வழிவகுக்குமென அச்சப்படுகிறார்கள்.தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய இரு கணிப்புகளை இங்கே காணலாம்.
நியூரோஹேக்கிங் (Neurohacking)
நியூரோஹேக்கிங் என்பது மனித மனத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் செயல்முறையாகும். உலகெங்கிலும் உள்ள பல ஆய்வகங்கள் ஏற்கனவே மனித சிந்தனையால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்களை வடிவமைத்துள்ளன. இந்த ஆய்வு சம்பந்தமாக சில ஆய்வாளர்கள் பின்வரும் கேள்வியை முன்வைக்கின்றனர்.
“மனித மனம் மூலம் இயந்திரங்களை செயற்படுத்த முடியுமென்றால், இந்த செயன்முறையை தலகீழாக செய்யக்கூடியதாக இருக்குமா? அதாவது, இயந்திரங்கள் மனித மனத்தை கட்ட்படுத்துமா?”
இதற்குரிய பதில் - நிச்சயமாக இயந்திரங்கள் மனித மனத்தை கட்டுப்படுத்த முடியும்.
சில ஆய்வகங்கள் மூளையின் மின் செயல்பாட்டை டிகோட் செய்துள்ளன. இதன்மூலம் மற்றவர்களுடம் தகவல்தொடர்பு கொள்ள முடியாதவர்கள் இயந்திரங்கள் மூலம் "பேச" முடிகிறது. நமது மூளையில் எண்ணங்கள் மூலம் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை சரியாக கையாள்வதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் இயந்திரங்களால் இயக்கப்படும் மனிதர்கள் உருவாகக் கூடிய சாத்தியங்களை இந்த தத்துவம் சொல்கிறது.
வடிவமைக்கப்பட்ட மனிதர்கள் (Designer Humans)
இந்த தலைப்பு சமீபத்திய ஆண்டுகளில் நிறைய பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. மரபணு சம்பந்தமான ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ளமை பின்வரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.
மனிதன் பிறப்பதற்கு முன்பே மரபணுக்களை திருத்துவது சரியானதா? இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மனிதன் உருவானால், அதன் தாக்கங்கள் பயமுறுத்தும் அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு நாடும் அழிக்க முடியாத சக்திவாய்ந்த மனித இனங்களை அடிமைகளாக உருவாக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.
அதேவேளை, இந்த ஆராய்ச்சி பல நல்ல விடயங்களுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் இதய நோய், புற்றுநோய்கள் உள்ளிட்ட பிறவி நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பார்வைக் குறைபாடு மற்றும் வழுக்கை போன்ற பொதுவான மரபணு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கலாம்.
ஆனால் இதில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை யார் அணுகுவார்கள்? யார் மாட்டார்கள்? வடிவமைக்கப்பட்ட மனிதர்கள் வடிவமைக்கப்படாதவர்களுக்கு எதிராக போட்டியிட அனுமதிப்போமா? நம்மை புத்திசாலியாகவும், வேகமாகவும், வலிமையாகவும் ஒரு மனித இனத்தை உருவாக்குவதற்கு, எந்தளவு சாத்தியமானது? தவறாகப் பயன்படுத்தினால், இந்த தொழில்நுட்பம் மனித குலத்துக்கே ஆபத்தானதாக அமையும்.
கருத்துகள் இல்லை