• Breaking News

    சுவிற்சர்லாந்து அருள்மிகு ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு..

     புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவியாக கோழிகளும் அதற்கு தேவையான ஒரு மாதத்திற்கான கோழித்தீவனம், சாப்பாட்டு தட்டு மற்றும் தண்ணித்தட்டு என்பவற்றை சுவிற்சர்லாந்து அருள்மிகு ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயமானது இன்று வழங்கி வைத்தது.


    ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், பாடசாலை மாணவர்களின் கல்விக்கு, கிணறுகள் அமைத்து கொடுத்தல் மருத்துவத்திற்கான உதவிகள் போன்ற பல நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad