தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவேந்துவதற்கு அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாம்...
தமிழீழ விடுதலைப் புலிகளை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும் என்றார்.
கருத்துகள் இல்லை