• Breaking News

    பனிகட்டி ஃபேஷியல் (Ice Cube Facial)

     நீங்கள் எப்போதாவது உங்கள் சருமத்திற்கு பனிக்கட்டி பேசியல் அளிப்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? ஆரோக்கியமான, பொலிவு மிக்க, ஒளிரும் சருமத்தை பெறும் வகையில் பனிக்கட்டி பேசியலை வீட்டிலேயே செய்து கொள்வது எப்படி? என பார்க்கலாம்...


    உங்களுக்கு என்ன தேவை:

    · 2 கிளாஸ் தண்ணீர்
    · 4 சொட்டு எசன்ஷியல் ஆயில்
    · அரை ஸ்பூன் கிரீன் டீ சாறு
    · பனிக்கட்டி டிரே

    தயாரிப்பு:

    · 2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்றவும்.
    · பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்கவும்.
    · இதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
    · பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்றவும்.

    செய்முறை:

    · ரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்கவும்.
    · பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ளவும்.
    · உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவவும்.
    · இவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்யவும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்றவும்.
    · பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ளவும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad