• Breaking News

    மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு...!

     கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகவுள்ள ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் இல 403, திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த உயிரிழந்தவரின் மனைவி, இதற்கு முன்னர் மூன்று தடவை அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad