• Breaking News

    மாணவர்கள் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்றதால் யாழ். பல்கலையில் அமளி துமளி...

     தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

    மாணவர்கள் இன்று மாலை 6 மணியளவில்  பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை அனுஷ்டிப்பதற்கு வருகை தந்த நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் பல்கலையில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றினர்.

    இந்நிலையில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளிநின்றமையை அவதானிக்கூடியதாக இருந்ததோடு இராணுவ மோட்டார் வாகனங்களும் சென்றன.

    கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை தட்டிக்கேட்க மாணவர் ஒன்றிய தேர்தலையும் நடாத்தாது பல்கலை நிர்வாகம் கொரோனாவை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வருவதாக குழுமியிருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad