• Breaking News

    தனது அழகில் ஆண்களை மயங்கவைத்து 17 வயதுப் பெண் செய்த அசிங்கம்!

     


    ரிக்ரொக் மூலம் இளைஞர்களிற்கு காதல் வலை விரித்து கடத்திச் சென்று பணம் பறித்த 17 வயது யுவதி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

    கொச்சிக்கடை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பை சேர்ந்த 17 வயதான யுவதியும், அவரது காதலனும், நண்பர்களுமே கைதாகிள்ளனர்.

    யுவதி ரிக்ரொக்கில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது அழகிய தோற்றம் காரணமாக பெருமளவு இளைஞர்கள் ரிக்ரொக்கில் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

    இளைஞர்களிற்கு காதல் வலை விரித்து, அவர்களிடம் நூதனமாக பணம் கொள்ளையிட்டு வந்துள்ளார்.

    இளைஞர்களுடன் காதல் உறவை வளர்ப்பதை போல பேசி, அவர்களை கொச்சிக்கடைக்கு அழைத்து, அங்கு தனது காதலன் மற்றும் நண்பர்கள் மூலம் பணம் பறித்து வந்தார்.

    இறுதியில், பசறை பகுதியை சேர்ந்த தனியார் ஆயுர்வேத நிலையத்தில் பணியாற்றும் ஒருவர் யுவதியின் காதல் வலையில் விழுந்து, பணத்தை இழந்திருந்தார். அவரது முறைப்பாட்டின் அடிபபடையில் யுவதியும், காதலன் உள்ளிட்ட கொள்ளைக்கும்பலும் கைதாகியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad