Header Ads

  • Breaking News

    குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள்...!

     சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

    உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சீர் செய்ய சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

    மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீடித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற தம்பதிகளுக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728