• Breaking News

    11 வாள்களுடன் வட்டுக்கோட்டையில் சந்தேகநபர் கைது! (படங்கள் இணைப்பு)

     


    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட அனைத்து வாள்களும் கோயில் பாவனையில், கோவிலின் உள்ளேயே இருந்துள்ளன. அந்த வாள்கள் கோவில் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுபவை.

    கோயில் சடங்கு செய்பவரின் 22 வயது மகனே வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad