விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட 6 மெட்ரிக் தொன் கஞ்சா!
விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்ரிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை, குமண பாதுகாப்பு வனாந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 5,788 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா தொகையே ஹெலிகொப்டர் மூலம் சஹஸ்ரவெலி விஷேட அதிரடிப்படைப்படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாறு ஹெலிகொப்டர் மூலம் கஞ்சா கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை