• Breaking News

    என்னை வீழ்த்தியது விடுதலைப் புலிகளின் தலைவர் தான்! ரணில் பகிரங்கம்

     


    கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

    ரணில் விக்ரமசிங்கவால் ஏன் இன்னமும் ஜனாதிபதியாக முடியவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.

    அதனையடுத்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார். அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பொதுவேட்பாளர்கள்தான் களமிறங்கினர்.

    இனிவரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. எவ்வாறாயினும் நபர்களைவிடவும் கொள்கைகளே முக்கியம் - என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad