மீசாலையில் வெடித்து சிதறியது சமையல் எரிவாயு அடுப்பு!
யாழ். தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சமையல் எரிவாயு அடுப்பு நேற்றைய தினம் வெடித்து சிதறியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அந்த வீட்டின் குடும்பத்தலைவி இரவு சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
கருத்துகள் இல்லை