யாழில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு! : பொலிஸார் தீவிர விசாரணை...
யாழ். - கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரி ஒருவர் மீதி வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த வியாபாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் காசு கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை