புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று(8) காலை பயணித்த புகையிரதத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்தே இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அப் பயணப் பொதியில் இருந்து சுமார் 360 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
புகையிரதத்தில் பயணம் செய்த இராணுவத்தினர் புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப் பொதி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.
இந் நிலையில், பயணப் பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் சௌத்பார் இராணுவத்தினர் அந்த பயண பொதியை சோதனை செய்துள்ளனர்.
இதன்போதே பயணப் பொதியில் இருந்து "ஐஸ்" போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சௌத்பார் இராணுவத்தினரால் "ஐஸ்" போதைப்பொருள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை