விமானத்தை மோதித் தள்ளிய புகையிரதம்! தெய்வாதீனமாக உயிர்தப்பிய விமானி
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன்றுடன் புகையிரத ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
அத்துடன் விபத்தின் காணொளி ஒன்றும் வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
புகையிரத தண்டவாளத்தின் மீது அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானத்தின் மீதே புகையிரதம் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி காவல்துறையினரினால் காப்பாற்றப்பட்டு ஒரு சில நொடிகளிலேயே விமானத்தின் மீது அதிவேக புகையிரதம் மோதியுள்ளது.
கருத்துகள் இல்லை