வடமாகாண சபை அவைத்தலைவரால் எழுதப்பட்ட “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” நூல் இன்று வெளியீடு!
நல்லூர் கந்தசாமி கோவில் பரிபாலகர் அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் இன்றைய தினம் வெளியிடப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு நல்லூர் நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளால் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்த கைநூல் அனைவருக்கும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செந்தமிழ்ச் சொல்லருவி லலீசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை