• Breaking News

    யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மாபெரும் பொங்கல் கலாச்சார விழா நாளையதினம் முன்னெடுக்கப்படவுள்ளது!

     


    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மாபெரும் பொங்கல் கலை கலாச்சார விழா நாளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

    காலை 8 மணியளவில் கலாச்சார விளையாட்டுகளுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு தொடர்ந்து பல்கலைக்கழக முற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கத்திற்கு விருந்தினர்கள் பாரம்பரிய நடனங்களோடு அழைத்து வரப்பட்டு இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும்,கலைஞர்களையும் இணைத்து கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

    கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பேரிடர் காரணமாக எதுவித  கலை கலாச்சார  நிகழ்வுகளும் பல்கலைக்கழக  மாணவர்களால் முன்னெடுக்கமுடியாத நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் இவ்வாறனதொரு நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிய சற்குணராஜாவும் சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி பரா. நந்தகுமார் ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி,பொதுச்செயலாளர் அகில இலங்கை சைவமகாசபை,பீடாதிபதிதிகள்,

    பேராசிரியர்கள், இலங்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ,அனுசரனையாளர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இந்நிகழ்வில் அனைவரையும் பங்கெடுக்குமாறு யாழ் பல்கலை மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad