யாழ். நகரப் பகுதியில் மலேரியாவை பரப்பும் ஒருவகை நுளம்பு கண்டுபிடிப்பு! - வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்பு மூலம் எமது பகுதியிலும் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. மலேரியாவை பரப்பக்கூடியநுளம்புகள் எங்களுடைய பிரதேசங்களில் தாராளமாக இருக்கின்றன.
எனவே வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்த மலேரியா தோற்றத்துடன் இங்கே வந்தால் உள்ளூரிலே இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது இந்த சூழ்நிலையில் எவ்வாறு இந்நோயினை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக மலேரியா உள்ள நாடுகளுக்கு செல்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை